ETV Bharat / state

விளம்பர பேனர் செலவு குற்றச்சாட்டு: தமிழ்நாடு அரசு விளக்கம்!

விளம்பர பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் மட்டுமே செலவு ஆனதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

author img

By

Published : Nov 24, 2022, 9:44 PM IST

விளம்பர பேனர் செலவு குற்றச்சாட்டு: இபிஎஸ்க்கு தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (நவ.23), விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவிடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு மீது வைத்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகளின் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் (6x4, 12x8, 10x8 அடி) அச்சடிக்கப்பட்டுள்ளன.

ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் (சரக்கு மற்றும் சேவைக்கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட, புகாரில் பேனர் ஒன்றுக்கு ரூபாய் 7,906 செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது முற்றிலும் தவறானதாகும் என விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு - சஸ்பெண்ட் குறித்து ரூபி மனோகரன் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.