ETV Bharat / state

மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர் பொறுப்பு யாருக்கு..? தேர்வு செய்யும் பணியில் அரசு தீவிரம்!

author img

By

Published : Feb 14, 2023, 3:43 PM IST

காலிப்பணியிடமாக உள்ள மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர், 4 தகவல் ஆணையர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

Tamil Nadu Government is actively engaged in selecting eligible candidates for Information Commissioner posts
மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர் பொறுப்பு யாருக்கு

சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. மாநில தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால், தகவல் ஆணையர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோர் செயல்பட்டனர்.

தகவல் ஆணையராக பணியாற்றுவோருக்கு 3 ஆண்டுகள் பணிக்காலமாகும். அந்த வகையில், தலைமை தகவல் ஆணையர் ஆர்.ராஜகோபாலின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 20-ம் தேதி முடிவடைந்ததால், அவர் பணியில் இருந்து விலகினார். அதேபோல, தகவல் ஆணையர்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோரது பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்தது.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் பதவிகளுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன. உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கான கால அவகாசம் கடந்த 3-ம் தேதியுடன் முடிவடைந்து, விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி நடைபெற்று வந்தது.

தகுதியானவர்கள் அடங்கிய பட்டியலை தேர்வுக் குழு தலைவர் நீதியரசர் அக்பர் அலி, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அந்தப் பட்டியலில் இருந்து, தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களை முதலமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரைகளை வழங்கும்.

அதன் அடிப்படையில் ஆளுநர் புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மே மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், மாநில தலைமை தகவல் ஆணையராக அவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோவையில் கல்லூரி மாணவர்கள் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.