ETV Bharat / state

புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு - chennai district news

புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலைஞர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

நாடகங்களை மேடையேற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

author img

By

Published : Jan 12, 2021, 10:55 PM IST

இது குறித்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உலக நாடக தினம் (WORLD THEATRE DAY) ஆண்டுதோறும் மார்ச் 27ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் புராணம், இதிகாசம், தமிழ் காப்பியங்கள், இலக்கியம், வரலாறு போன்ற ஒன்பது வகையான புதிய நாடகங்களை மேடையேற்றம் செய்திட வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துக்கள் புதியனவையாகவும், மூலநூல்களிலிருந்து வேறுபட்டதாகவும் இருக்க வேண்டும். நமது பண்பாடு, கலாசாரம், மொழி போன்றவற்றிற்கு மாறுபட்ட கருத்துக்கள் இடம்பெறக்கூடாது. மேடையேற்றம் செய்யப்பட உள்ள புதிய நாடகங்கள் அரசையோ அல்லது அரசின் திட்டங்களையோ விமர்சனம் செய்யாதவாறு இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடகமும் சுமார் 2 மணி நேரத்திற்குள் முடியும் வகையில் அமையப்பெற வேண்டும். நாடகம் மேடையேற்றம் செய்வதற்கான அமைப்புச் செலவினம் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். நாடக ஆசிரியர் மற்றும் நாடகக் குழுவிற்கு மன்றத்தால் நிர்ணயிக்கப்படும்.

இதில் பங்கு பெற விரும்புவர்கள் விண்ணப்பத்துடன் புதிய நாடகத்தின் தலைப்பு மற்றும் நாடகத்தின் மூன்று முழு பிரதிகள் இணைக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள் விண்ணப்பப்படிவம் பெறவும் நிபந்தனைகள் பற்றித் தெரிந்து கொள்ளவும் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31, பொன்னி பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை. சென்னை-600 028 என்ற முகவரியிலும், 044-24937471 என்ற எண்ணிலும், tneinm@gmail.com, tneinm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம். வரும் 5ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா வந்தா பயப்பட வேண்டாம்... நாடக கலைஞர்களின் விழிப்புணர்வு நாடகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.