ETV Bharat / state

இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Jun 6, 2021, 5:32 PM IST

மத்தியப்பிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிவரை (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (ஜுன்.6) சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஜுன் 7, 8 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜுன் 9, 10 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (செ.மீட்டரில்) :

திருமயம் (புதுக்கோட்டை) 19, லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 9, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பந்தலூர் (நீலகிரி) தலா 8, தொழுதூர் (கடலூர்), நெய்வேலி (கடலூர்), சோத்துப்பாறை (தேனி), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) தலா 7, பெரியாறு (தேனி), காட்பாடி (வேலூர் ), மண்ணூர்பேட் (கள்ளக்குறிச்சி) தலா 6, எறையூர் (பெரம்பலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), செஞ்சி (விழுப்புரம்), கிருஷ்ணகிரி, மோகனுர் (நாமக்கல்) தலா 5.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஜுன் 8ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜுன் 8, 9 ஆகிய தேதிகளில், கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜுன் 9, 10 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல், தெற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் 921 பேர் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.