ETV Bharat / state

10 விழுக்காடு போனஸ்: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

author img

By

Published : Nov 9, 2020, 7:51 PM IST

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் லாப நட்டக் கணக்கு பார்க்கும் துறை அல்ல இது ஒரு சேவைத் துறை எனத் தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்கள் தெரிவித்தனர்.

protest
protest

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்காமல் தன்னிச்சையாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொழிலாளர் விரோதப் போக்கு என தெரிவித்தனர்.

protest
மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளரும் தொழிற்சங்க நடவடிக்கை குழுவின் நிர்வாகியுமான ராஜேந்திரன், தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தொடர்ந்து மின்சார வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் என தொழிலாளர்களை அழைத்து பேசாமல் அறிவித்துள்ளது. இதனை நாளை முதல் வழங்க உள்ளது.

தமிழ்நாடு மின்சார ஊழியர்கள் 2019- 2020 ஆம் ஆண்டிற்குரிய போனஸ் வழங்க வேண்டும் என கேட்கிறோம். கரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கியது. போனஸ் அறிவிப்பதற்கு முன்னர் மின்சார வாரிய தொழிலாளர்களை அழைத்துப் பேசி வெளியிட்டிருக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வந்த மரபை மீறி தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் யாரையும் அழைத்து பேசாமல் போனஸ் அறிவித்துள்ளார். போனஸ் சரிபாதியாக குறைக்கப்பட்டுள்ளதால் பொறியாளர்கள் பணியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது.

தொழிற்சங்க நடவடிக்கை குழுவின் நிர்வாகி ராஜேந்திரன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

ஏற்கனவே துணை மின் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என நவம்பர் நான்காம் தேதி தர்ணா போராட்டம் நடத்தினோம். ஆனால் அதேநேரத்தில் திருப்பத்தூரில் ஒரு துணை மின் நிலையத்தை தனியாருக்கு மீண்டும் இரண்டு ஆண்டிற்கு குத்தகைக்கு விடுவதற்கு மின் வாரிய தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தற்போது 110 கேவி, 66 கேவி துணை மின் நிலையங்களையும் தனியாரிடம் அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருக்கும் நட்டத்திற்கு எந்த வகையிலும் சூறாவளி காரணம் அல்ல. ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் தொழிலாளிகள் 200 விழுக்காடு கூடுதலாக வேலைப்பளுவில் பணிபுரிகின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் லாப நட்டக் கணக்கு பார்க்கும் துறை அல்ல இது ஒரு சேவை துறை. எங்களின் கோரிக்கை 25 அல்லது 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளில் எங்களை அழைத்துப் பேசி 20% போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று(நவம்பர் 9) ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.

தமிழ்நாடு அரசு மின் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினையில் தீர்வு காண வேண்டும். தீர்வு காணவிட்டால் அடுத்தகட்டமாக தொழிற்சங்கங்கள் கூறி கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்போம்.

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் விதிப்படி வேலை செய்வது அதாவது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் மேற்கொள்வது அல்லது நீண்ட நெடிய வேலை நிறுத்தத்திற்கு செல்வது குறித்தும் தொழிற்சங்கங்கள் கலந்து பேசி முடிவு அறிவிப்போம்.

அனைத்திற்கும் கால அவகாசம் அளித்தது போல் இதற்கும் காலஅவகாசம் வழங்கி பின்னர் முடிவெடுத்து அறிவிக்கப்படும். எங்களை போராட்டத்தில் தள்ளி விடுவது தமிழ்நாடு அரசும் மின்சார வாரியமும் தான் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.