ETV Bharat / state

புதிய மாளிகை வீட்டால் ரெய்டில் சிக்கிய இளங்கோவன்?

புதிய மாளிகை வீட்டால், இளங்கோவன் ரெய்டில் சிக்கியதாக புதுத்தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மாளிகை வீட்டால் ரெய்டில் சிக்கிய இளங்கோவன்
Elangovan
author img

By

Published : Oct 22, 2021, 12:53 PM IST

Updated : Oct 22, 2021, 1:42 PM IST

சென்னை : அதிமுக இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய சேலம் கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரான இளங்கோவன் தொடர்பான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இளங்கோவன் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும் 2013 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளங்கோவன் சொந்த ஊரில் 4.40 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே வைத்திருந்தார்.

சொத்துக் குவிப்பு
குறிப்பாக 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளது. சொகுசு பங்களாக்கள் கட்டி இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இளங்கோவன் புதிய மாளிகை
இளங்கோவன் புதிய மாளிகை

முக்கிய அரசியல் பிரமுகர்களின் தொடர்பின் மூலம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் பெயரிலும், தன் மகன் பிரவீன் குமார் பெயரிலும் சொத்து சேர்த்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அந்த அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு 30 லட்சத்து 24 ஆயிரத்து 540 ரூபாய் மட்டுமே சொத்துக்களாக வைத்திருந்த இளங்கோவன், 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 கோடியே 60 ஒரு லட்ச ரூபாய் அளவிற்கு நிலம், வீடு, வாகனம் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

131 விழுக்காடு உயர்வு

இவர் தனது வருவாய் மற்றும் சம்பளத்தின் மூலம் இரண்டு கோடியே 88 லட்சம் ரூபாய் அளவிற்கு சம்பாதித்து உள்ளதாகவும் தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இவரது வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து பார்க்கும்போது வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரம் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இளங்கோவன் வீட்டில் சோதனை
இளங்கோவன் வீட்டில் சோதனை
இதில் வருமானத்தைவிட 131 சதவீதம் அதிகமாக செய்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இளங்கோவன் தனது பெயரிலும், தனது மகன் பெயரிலும் சொத்துக்களை சேர்த்து வைத்ததோடு மட்டுமல்லாது, பினாமி பெயர்களில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் சொத்துக்களை வாங்கி இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

26 இடங்களில் சோதனை

மேலும் பதவியில் இருந்த காலத்தில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளை தொடர்பான கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ததையும் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக திருச்சி முசிறி ஆகிய பகுதியில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இளங்கோவன் புதிய மாளிகை

இதையடுத்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்து தற்போது அவர்களுக்கு தொடர்பான 26 இடங்களில் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக சேலத்தில் 17 இடங்களிலும், நாமக்கல் மற்றும் சென்னையில் 2 இடங்களிலும், திருச்சியில் 4 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கம்

ஆர். இளங்கோவன் அதிமுக ஜெ பேரவை செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமானவராகவும் இருந்தார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சோதனை இன்று அல்லது நாளை வரை தொடர்ந்து நடைபெறலாம் என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் முடிவிலேயே முக்கிய ஆவணங்கள் மற்றும் தங்கம் வெள்ளி மற்றும் கணக்கில் வராத ரொக்கம் ஆகியவை குறித்து தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : மாநில கூட்டுறவுச் சங்கத் தலைவர் வீட்டில் சோதனை!

Last Updated : Oct 22, 2021, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.