இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 199 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 1, 755 நபர்களுக்கும், மேற்கு வங்காளத்திலிருந்து வந்த 1 நபருக்கும் என 1,756 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 28) கரோனா தொற்றால் 1,756 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 53 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 21 ஆயிரத்து 521 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில், 2,394 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 98 ஆயிரத்து 289ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 29 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 995ஆக அதிகரித்துள்ளது
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை- 537546
கோயம்புத்தூர் - 228685
செங்கல்பட்டு - 161623
திருவள்ளூர் - 113201
சேலம் - 93140
திருப்பூர்- 87570
ஈரோடு - 93207
மதுரை- 73443
காஞ்சிபுரம்- 71575
திருச்சிராப்பள்ளி- 72190
தஞ்சாவூர்- 67538
கன்னியாகுமரி- 60013
கடலூர்- 60241
தூத்துக்குடி- 55027
திருநெல்வேலி- 47830
திருவண்ணாமலை- 51918
வேலூர்- 47987
விருதுநகர்- 45452
தேனி- 42888
விழுப்புரம்- 43764
நாமக்கல்- 47007
ராணிப்பேட்டை- 41904
கிருஷ்ணகிரி- 41238
திருவாரூர்- 37722
திண்டுக்கல் - 32149
புதுக்கோட்டை- 28066
திருப்பத்தூர் - 28195
தென்காசி- 26816
நீலகிரி- 30399
கள்ளக்குறிச்சி- 28921
தருமபுரி- 26018
கரூர்- 22598
மயிலாடுதுறை- 20963
ராமநாதபுரம்- 20004
நாகப்பட்டினம்- 18571
சிவகங்கை- 18719
அரியலூர்- 15705
பெரம்பலூர்- 11453