ETV Bharat / state

61 போலி கடன் செயலிகளால் ஆபத்து.. கூகுளுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு போலீஸ்! - TN Police

ஆர்பி.ஐ அனுமதி பெறாமல் இயங்கி வரும் 61 கடன் செயலிகளை உடனடியாக நீக்குமாறு கூகுள் நிறுனவத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 5, 2023, 12:53 PM IST

சென்னை: ஆர்பி.ஐ(RBI) அனுமதி பெறாமல் இயங்கி வரும் 61 கடன் செயலிகளை உடனடியாக நீக்குமாறு கூகுள் நிறுனவத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், "கடந்த 4 மாதங்களில் முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட உயரிய பொறுப்புகளில் உள்ள நபர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டிருந்த 386 வீடியோக்கள் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 256 ஆன்லைன் கடன் செயலிகளை நீக்கம் செய்து மாநில சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமிழகத்தில் சமூக வலைதளம் மூலமாக சைபர் கிரைம் மோசடிகள், அவதூறு மற்றும் பொய்யாக பரப்பப்படும் கருத்துகளால் சாதி மத மோதல்கள் என அதிகளவு குற்றங்கள் அரங்கேறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி கலவரம், வடமாநில நபர்கள் தாக்கக்கூடிய சம்பவம், கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரவிய தவறான கருத்துகளால் பின்நாளில் பூதாகரமாக வெடித்த நிலையும் ஏற்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் சமூக விரோதிகளால் பரப்படும் பொய்யான மற்றும் அவதூறு கருத்துகள், ஆன்லைன் மோசடி வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக மாநில சைபர் கிரைமில் தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஆன்லைன் மோசடி இணையதளம், சாதி மத மோதல்கள் உருவாக்கும் வகையில் வீடியோக்கள், கலவரத்தை ஏற்படுத்தும் வீடியோக்கள், போலி செய்திகள் என சமூக வலைதளங்களில் இருந்து மொத்தம் 40 சட்டவிரோத பதிவுகளை மாநில சைபர் கிரைம் காவல்துறை நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ள நபர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 386 யூடியூப் வீடியோக்களை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், அதுமட்டுமின்றி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் 221 ஆன்லைன் கடன் மோசடி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருப்பதாகவும், மேலும் ஆர்பி.ஐ அனுமதி பெறாமல் இயங்கி வரும் 61 கடன் செயலிகளை நீக்குமாறும் கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தீரன்' பட பாணியில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தலைவன் கைது.. போலீசாருக்கு குவியும் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.