சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 9 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் மேலும் 719 நபர்களுக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 39 லட்சத்து 51 ஆயிரத்து 331 கரோனா பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 31 ஆயிரத்து 235 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,013 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்த 737 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 86 ஆயிரத்து 683 என உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 7 நோயாளிகளும் என 10 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 539 என உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் 113 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 127 நபர்களுக்கும் ஈரோட்டில் 65 நபர்களுக்கும் புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை மாவட்டம் - 5,58,757
கோயம்புத்தூர் மாவட்டம் - 2,50,927
செங்கல்பட்டு மாவட்டம் - 1,74,143
திருவள்ளூர் மாவட்டம் - 1,20,367
ஈரோடு மாவட்டம் - 1,06,650
சேலம் மாவட்டம் - 1,01,602
திருப்பூர் மாவட்டம் - 97,521
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 78,561
மதுரை மாவட்டம் - 75,558
காஞ்சிபுரம் மாவட்டம் - 75,715
தஞ்சாவூர் மாவட்டம் - 76,177
கடலூர் மாவட்டம் - 64,436
கன்னியாகுமரி மாவட்டம் - 62,841
தூத்துக்குடி மாவட்டம் - 56,516
திருவண்ணாமலை மாவட்டம் - 55,221
நாமக்கல் மாவட்டம் - 53,757
வேலூர் மாவட்டம் - 50,263
திருநெல்வேலி மாவட்டம் - 49,678
விருதுநகர் மாவட்டம் - 46,404
விழுப்புரம் மாவட்டம் - 46,035
தேனி மாவட்டம் - 43,610
ராணிப்பேட்டை மாவட்டம் - 43,593
கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,897
திருவாரூர் மாவட்டம் - 41,907
திண்டுக்கல் மாவட்டம் - 33,262
நீலகிரி மாவட்டம் - 34,165
கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,572
புதுக்கோட்டை மாவட்டம் - 30,341
திருப்பத்தூர் மாவட்டம் - 29,403
தென்காசி மாவட்டம் - 27,396
தருமபுரி மாவட்டம் - 28,858
கரூர் மாவட்டம் - 24,701
மயிலாடுதுறை மாவட்டம் - 23,388
ராமநாதபுரம் மாவட்டம் - 20,638
நாகப்பட்டினம் மாவட்டம் - 21,365
சிவகங்கை மாவட்டம் - 20,424
அரியலூர் மாவட்டம் - 16,931
பெரம்பலூர் மாவட்டம் - 12,109
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1033
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: Omicron - மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு