ETV Bharat / state

முதலமைச்சரின் வெளிநாடு பயணம் - ஓர் பார்வை!

தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். 14 நாட்கள் அரசுமுறைப் பயணத்தின் முக்கிய சாராம்சம் என்ன என்பது பற்றி பார்ப்போம்...

tamil-nadu-cms-foreign-tour
author img

By

Published : Sep 10, 2019, 9:05 AM IST

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் முதலில் இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்கா, துபாய் நாடுகளுக்குச் சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். பல்வேறு நிறுனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

Edappadi K Palaniswami ‏
முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

முதலமைச்சரின் பயணம் ஓர் பார்வை...

இங்கிலாந்தில் முதலமைச்சர் ஈபிஎஸ்

  • 29-8-2019 லண்டனில் செயல்படுத்தப்பட்டுவரும் அவசர ஊர்தி சேவை திட்டத்தை பார்வையிட்டு அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாக அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
  • 29-8-2019 லண்டனில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார்.
  • 01-09-2019 லண்டனில் சர்வதேச புகழ்பெற்ற கே.இ.டபிள்யூ. (KEW) தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு, தாவரங்களின் வளர்ப்பு, பராமரிப்பு முறையை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

அமெரிக்காவில் முதலமைச்சர் ஈபிஎஸ்

  • 02-09-2019 அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு சென்று கால்நடை வளர்ப்பு முறை மற்றும் பண்ணை பராமரிப்பு, மருத்துவம் உள்ளிட்டவை பற்றி அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பண்ணையில் உள்ள பசுக்கன்றுகளுக்கு தீவனம் அளித்து மகிழ்ந்தார்.
    Edappadi K Palaniswami ‏
    பசுக்கன்றுக்கு தீவனம் ஊட்டிய முதலமைச்சர்
  • 02-09-2019 சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள கால்நடைப்பூங்காவில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பஃபல்லோ கால்நடைப்பண்ணை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
  • 03-09-2019 அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்க உதவும் 'யாதும் ஊரே' திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
  • 04-09-2019 நியூயார்க்கில் முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்புவிடுத்தார்.
  • 05-9-2019 சான்பிரான்சிஸ்கோ நகரில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை பார்வையிட்டு வாகன உற்பத்தி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார்.
    Edappadi K Palaniswami ‏
    டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை பார்வையிட்ட முதலமைச்சர்
  • 05-09-2019 சான்பிரான்சிஸ்கோ நகரில் மாசில்லா எரிசக்தி கூடமான 'ப்ளூம் எனர்ஜி' நிறுவனத்தை பார்வையிட்டு, மின்சார தயாரிப்பு முறையை கேட்டறிந்ததோடு அந்நிறுவன அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நினைவுப்பரிசுகளை முதலமைச்சர் வழங்கினார்.
  • 06-09-2019 லாஸ் ஏஞ்சல்ஸ் அனாஹெய்ம் நகரில் கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டு, அதுபோன்று தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
    Edappadi K Palaniswami ‏
    முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர்

துபாயில் முதலமைச்சர் ஈபிஎஸ்

  • 09-09-2019 துபாயில் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்தியா திரும்பிய முதலமைச்சர் ஈபிஎஸ்

  • 10-09-2019 - அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பயணத்தின்போது பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

இங்கிலாந்து

  • 29-08-2019 லண்டனில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி மேம்பாடுகளை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு அரசிற்கும் 'இன்டர்நேஷனல் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பொரேஷன் (INTERNATIONAL SKILLS DEVELOPMENT CORPORATION)' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • 29-08-2019 டெங்கு மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்க கையாளும் வழிமுறை தொடர்பான ஒப்பந்தம் லண்டன் 'ஸ்கூல் ஹைஜீன் ஆஃப் ட்ரோப்பிக்கல் மெடிசின் (LONDON SCHOOL HYGIENE OF TROPICAL MEDICINE)' நிறுவனத்துடன் கையெழுத்தானது
  • 29-08-2019 லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை அதன் கிளைகளை தமிழ்நாட்டில் நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
    Edappadi K Palaniswami ‏
    யாதும் ஊரே திட்ட தொடக்க விழா

அமெரிக்கா

  • 03-9-2019 அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 16 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழ்நாட்டிற்கு இரண்டாயிரத்து 780 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள்
  • 03-9-2019 ஹால்டியா பெர்ட்டோகெமிக்கல்ஸ் (HALDIA PERTOCHEMICALS) நிறுவனம் நாப்த்தா கிராக்கர் யூனிட் (NAPHTHA CRACKER UNIT) உடன் கூடிய உற்பத்தித் தொழிற்சாலையை முதற்கட்டமாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க விருப்பம் தெரிவித்து கொள்கை அளவிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.
    Edappadi K Palaniswami ‏
    ஒப்பந்தம் கையெழுத்து
  • 04-9-2019 அமெரிக்காவின் நியூயார்க்கில் லின்கால்ன் எலக்ட்ரிக், கூகுள் எக்ஸ், டை குளோபல் (LINCOLN ELECTRIC, GOOGLE X, TIE GLOBAL) உள்பட 20 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழ்நாட்டிற்கு இரண்டாயிரத்து 300 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ஆறாயிரத்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்
    Edappadi K Palaniswami ‏
    அமேசான் நிறுவன அலுவலர்களுடன்

துபாய்

  • 09-09-2019 ஐக்கிய அரபு அமீரக அரசின் கீழ் செயல்படும் 'business Leaders Forum' என்ற அமைப்பும் இந்திய துணை தூதரகமும் இணைந்து துபாய் தொழில் முனைவோர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் மூன்றாயிரத்து 750 கோடியில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 10 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
    Edappadi K Palaniswami ‏
    துபாயில் முதலமைச்சருக்கு வரவேற்பு

Intro:Body:FINAL*****************

29.8.2019 - லண்டனில் செயல்படுத்தப்பட்டு வரும் அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை பார்வையிட்டு அதனை தமிழகத்தில் செயல்படுத்த விவரங்களை கேட்டறிந்தார்.

29.08.2019 - லண்டனில் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் 

01.09.2019 - லண்டனில் சர்வதேச புகழ்பெற்ற KEW தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு, தாவரங்களின் வளர்ப்பு, பராமரிப்பு முறையை தமிழகத்தில் செயல்படுத்த தகவல்களை கேட்டறிந்தார் 

02.09.2019 - அமெரிக்கா நாட்டில் உள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு சென்று கால்நடைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 

02.09.2019 - சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள கால்நடைப்பூங்காவில் திட்டங்கள் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை  பஃபல்லோ  கால்நடைப்பண்ணையில் கேட்டறிந்தார் 

03.09.2019 - அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்க உதவும் “ யாதும் ஊரே “ திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார் 

04.09.2019 - அமெரிக்கா நாட்டின் நியூயார்க்கில் முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார் 

05.9.2019 - அமெரிக்கா நாட்டில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை  பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
 
05.09.2019 - அமெரிக்கா நாட்டில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் மாசில்லா எரிசக்தி கூடமான ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தை  பார்வையிட்டு, மின்சார தயாரிப்பு முறையை கேட்டறிந்ததோடு அந்நிறுவன அதிகாரிகளுக்கு தமிழக அரசு சார்பில் நினைவுப்பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
 
06.09.2019- அமெரிக்கா நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் அனாஹெய்ம் நகரில் கழிவு நீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டு, அதனை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டு தகவல்களை கேட்டறிந்தார். 

09-09-2019 - துபாயில் தொழில் முனைவோர்கள் உடன் ஆலோசனை கூட்டம்.

10 - 09 -2019 - அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைதல்
***************************************************

முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள்

14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை தாயகம் திரும்பினார்.

 முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 28-ந்தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.  

இங்கிலாந்து 

29.08.2019 - லண்டனில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களின் பணி மேம்பாடுகளை உயர்த்தும் வகையில் தமிழக அரசிற்கும் INTERNATIONAL SKILLS DEVELOPMENT CORPORATION நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

29.08.2019 - டெங்கு மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்க கையாளும் வழிமுறை தொடர்பான ஒப்பந்தம் LONDON SCHOOL HYGIENE OF TROPICAL MEDICINE நிறுவனத்துடன் கையெழுத்தானது *

29.08.2019 - லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை அதன் கிளைகளை தமிழகத்தில் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெளிநாடுகள் பயணத்தின் போது, 5 ஆயிரம்கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தமிழக இளைஞர்கள் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி.. 

அமெரிக்கா - 

3.9.2019 - அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 16 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- தமிழகத்தில் 2780 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் *

3.9.2019 - HALDIA PERTOCHEMICALS நிறுவனம்  NAPHTHA CRACKER UNIT உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை முதற்கட்டமாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க விருப்பம் தெரிவித்து கொள்கை அளவிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாகும்

4.9.2019 - அமெரிக்கா நாட்டில் உள்ள நியுயார்க்கில் LINCOLN ELECTRIC, GOOGLE X, TIE GLOBAL உட்பட 20 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழகத்தில் 2300 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் 6500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்

09-09-2019 - ஐக்கிய அரபு அமீரக அரசின் கீழ் செயல்படும் 'business Leaders Forum"என்ற அமைப்பும் இந்திய துணை தூதரகமும் இணைந்து நடத்திய ' துபாய் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரூ. 3750 கோடியில் தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவாக 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 10 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.