தமிழ்நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்தவாரத்தில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதற்கேற்றார்போல் வணிகர்களும், முதலமைச்சர் உத்தரவிட்டால் கடைகளை மூடுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், ஊரடங்கு குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.
இந்தச் சூழ்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் எனது பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவின் புதிய உச்சம்: 40 ஆயிரத்தை கடந்துச் செல்லும் பாதிப்பு