ETV Bharat / state

'வாழ்த்துகள், ஓயாது உழைத்திட ஊக்கம் தரும்!' - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன், ஓயாது உழைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

tamil nadu cm stalin letter  stalin letter to dmk party member  stalin letter  letter to dmk party member  ஸ்டாலின் கடிதம்  தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
stalin letter
author img

By

Published : Feb 27, 2022, 8:31 PM IST

சென்னை: திமுக தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் இமாலய வெற்றியை - மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கின்றனர்.

வெற்றி பெற்றவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் அவர்களைவிட எனக்கு அதிகமாக இருந்தது. அறிவாலயத்தில் அவர்களின் ஆர்வம் பொங்கிடும் ஒளிமுகம் கண்டு அகம் மகிழ்ந்தேன்.

முதலமைச்சர் என்ற முறையில் பணிகள் நிறைந்திருந்த நிலையில், ஓய்வையும் உறக்கத்தையும் சற்று உதறித் தள்ளிவைத்துவிட்டு, கழகத்தினரைக் காணும் பேராவலில், ஒவ்வொரு நாளும், 6 மணி நேரத்திற்கும் அதிகமாக நின்றபடியே அவர்களின் அன்பினை நிறைவுடன் ஏற்றுக் கொண்டேன்.

நம் தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் நிகழ்வில் மணிக்கணக்கில் மேடையில் நின்று, என் கைகளால் அவர்களுக்கு நிதி வழங்கி மகிழ்ந்தேன். அதே போன்ற மிகுந்த மகிழ்வான உணர்வுடன், வெற்றி அன்பினை ஏற்று, அவர்களை மனதார வாழ்த்தினேன்.

ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் ‘சிக்ஸர்’

இந்த வெற்றி மாபெரும் வெற்றி. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் ‘சிக்ஸர்’ அடிப்பது போன்ற வெற்றி இது. மக்கள் தந்த வெற்றி. இந்த வெற்றியின் அருமை பெருமை முழுவதும் மக்களையே சேரும்.

நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சிறந்த அடையாளமான இந்த வெற்றி என்பது, மக்களுக்கு நாம் நிறைவேற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களால்தான் முழுமை பெறும். அதிலும், உள்ளாட்சி அமைப்புகள் என்பவை ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்குபவை. மக்களாட்சியின் உயிரோட்டத்தைக் கொண்டிருப்பவை.

அதில் வெற்றி பெற்றவர்கள் ஆற்றும் விரைவான பணி என்பது மக்களுடன் நேரடியானது. அரசின் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டு சேர்ப்பது. அதனால்தான், வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தபோது, உங்களில் ஒருவனான நான், வெற்றி பெற்றவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பேன் என்று தெரிவித்தேன்.

மேயர், துணை மேயர் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2ஆம் நாள் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில், மார்ச் 4 அன்று மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தங்கள் உள்ளாட்சி அமைப்புக்கான தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர்.

நேரடித் தேர்தலில் மக்கள் தந்த மகத்தான வெற்றிக்கு வலு சேர்க்கும் வகையிலும், திமுகவின் கட்டுப்பாட்டையும், கூட்டணியின் ஒற்றுமையுணர்வையும் வெளிப்படுத்தும் வகையிலும் திமுவின் சார்பில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்கள் இதனைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது உங்களில் ஒருவனான எனக்கு, தமிழ்நாட்டு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர்- துணைத் தலைவர் தேர்தலில் கட்டுக்கோப்புடன், ஒருமனதுடன் செயல்படுவதுதான் திமுவினரிடம் நான் எதிர்பார்க்கும் பரிசு.

‘உங்களில் ஒருவன்’

என்னுடைய பிறந்தநாளில் நான் உங்களுக்கு வழங்கும் நன்றிப் பரிசாக 'உங்களில் ஒருவன்’ என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன்.

உங்களில் ஒருவனான என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், நான் பிறந்த 1953ஆம் ஆண்டு முதல், நெருக்கடி நிலைக்காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1976ஆம் ஆண்டு வரையிலான முதல் 23 ஆண்டுகால வாழ்க்கையை 'உங்களில் ஒருவன்' என்ற மனதுக்கு நெருக்கமான தலைப்பிலேயே புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறேன்.

என் சிறு வயது எண்ணங்கள், பள்ளிக்கால நினைவுகள், கருணாநிதியின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டைப் பருவத்தில் இருவண்ணக் கொடியேந்தி இயக்கத்திற்காக இயங்கத் தொடங்கிய ஏற்றமிகு பொழுதுகள் உள்ளிட்ட அனுபவங்களை இதில் பதிவு செய்திருக்கிறேன்.

திமுகவின் உடன்பிறப்புகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெறுவேன்

திமுகவினரின் இதய அன்பும் இணையிலா வாழ்த்துகளுமே நான் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பதற்கு ஊற்றுப் பிரவாகமாக அமைகின்றன. மார்ச் 1 அன்று என்னுடைய பிறந்தநாள். எப்போதும் போல கருணாநிதியின் வாழ்த்துகளுடன்தான் தொடங்கும். என்னை ஈன்ற அன்னை தயாளு அம்மையார் வாழ்த்து பெற்று, குடும்பத்தினரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, உயிரனைய திமுகவின் உடன்பிறப்புகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெறவிருக்கிறேன்.

பிறந்தநாளையொட்டி, நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக்கூடாது என்பது என் அன்புக் கட்டளை. மக்களுக்கு உரிய பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்காலத் தலைமுறைக்கு நம் இலட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் திமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள்.

சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என கருணாநிதி பொன்மொழியை நினைவில் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன். ஓயாது உழைப்பேன். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதியினை ஏற்கிறேன்' என எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் பொய்யான பரப்புரைகளுக்கிடையே திமுக மிகப்பெரிய வெற்றி - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.