சென்னை: நாடாளுமன்றத்தின் 37ஆவது அலுவல் மொழிக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 7) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். அப்போது அமித் ஷா, "ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இந்த முடிவு இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.
ஆங்கில மொழிக்கு மாற்றாக, இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கலாம்' என்று கூறினார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களும் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்வீட்டில், “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 'இந்தி மாநிலம்' போதும். இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா. ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது.
ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால், அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
-
"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!
— M.K.Stalin (@mkstalin) April 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. (1/2)#StopHindiImposition
">"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!
— M.K.Stalin (@mkstalin) April 8, 2022
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. (1/2)#StopHindiImposition"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!
— M.K.Stalin (@mkstalin) April 8, 2022
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. (1/2)#StopHindiImposition
இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பின் வரலாறு தெரியுமா..? அமித்ஷாவின் கருத்துக்கு கனிமொழி கண்டனம்...