ETV Bharat / state

MK Stalin on Twitter Speaking For india : "தெற்கில் இருந்து ஒலிக்கும் குரலுக்காக காத்திருங்கள்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! - ஸ்பீக்கிங் பார் இந்தியா முக ஸ்டாலின்

MK stalin Speaking 4 India, MK Stalin Podcast : ஸ்பீக்கிங் பார் இந்தியா என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Stalin
Stalin
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 7:57 AM IST

Updated : Aug 31, 2023, 8:05 AM IST

ஐதராபாத் : தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவில் பல்வேறு கருத்துகளை வீடியோ மூலமாக பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இந்த ஆடியோ சீரிஸ்க்கு "ஸ்பீக்கிங் பார் இந்தியா" (Speaking for india) என்ற முதலமைச்சர் தலைப்பு வைத்து வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024 ஆம் ஆண்டு முடியப்போகிற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்து இருக்கிறார்கள், எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரிஸ் மூலம் பேசப் போகிறேன்.

அதற்கு ஸ்பீக்கிங் பார் இந்தியா என்ற தலைப்பில் வைத்துக் கொள்ளலாமா..? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்..!" என்று ஆடியோ மூலம் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை.. நெல்லையில் தொடரும் படுகொலைகள்!

Last Updated : Aug 31, 2023, 8:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.