ETV Bharat / state

முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் - cabinet meeting of this year will be chaired by Chief Minister Edappadi K Palaniswami

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

cabinet
cabinet
author img

By

Published : Feb 4, 2020, 10:18 AM IST

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 10.:30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கவுள்ளது. இதில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் ஆகியவை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தின்போது, தென் மாவட்டங்களில் முதலீட்டை அதிகரிக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் தொழில்துறை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய தொழில் தொடங்க நிறுவனங்களுக்கான அனுமதி, விரிவாக்கம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் நட்டுவைத்த இருவர் மீது வழக்குப்பதிவு

Intro:Body: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்க உள்ளது.இதில் தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்பட உள்ள 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில், தென் மாவட்டங்களில் முதலீட்டை அதிகரிக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் விரிவாக்கம் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.