ETV Bharat / state

Ilayaraja: 80வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா.. பரிசுடன் நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்! - மு க ஸ்டாலின் வாழ்த்து

80வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததோடு புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 2, 2023, 1:43 PM IST

சென்னை: இந்திய சினிமாவின் 'இசைஞானி' என அழைக்கப்படும் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தாளை கொண்டாடுகிறார். காதல், மகிழ்ச்சி, சோகம் என அனைத்து நிகழ்வுகளுக்கும் 80களில் தொடங்கி 2K கிட்ஸ் வரை அனைவரும் இளையராஜாவின் இசைக்கு அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி தனது பாடல்களால் ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திறன் படைத்தவர். அதனால் தான் மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. அதோடு திரைத்துறை சார்ந்த பல விருதுகளை இளையராஜா சொந்தக்காரர்.

பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று காலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலைப் பொழுது இனிதாய் மலர.. பயணங்கள் இதமாய் அமைய.. மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற.. துன்பங்கள் தூசியாய் மறைய.. இரவு இனிமையாய்ச் சாய.. தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!" என வர்ணித்து இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி இளையராஜா என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

  • காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!

    அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார்.… pic.twitter.com/Os1dE1UJKH

    — M.K.Stalin (@mkstalin) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: Actress Rekha: 20 ஆண்டுக்கு பிறகு ஹீரோயினாக களமிறங்கும் நடிகை ரேகா!

அதனைத் தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது மூத்த அமைச்சர்கள், கே.என்.நேரு, பொன்முடி மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுடினார். அப்போது இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், "நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று வாழ்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியிங்க: ஆடல், பாடல் குறித்த புதிய மனுக்களை விசாரிக்க தேவை இல்லை - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.