ETV Bharat / state

ஓபிஎஸ் மனைவி மறைவு- முதலமைச்சர் இரங்கல் - latest chennai news

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் தெரவித்துள்ளார்.

Tamil Nadu Chief Minister MK Stalin pays homage to pannerselvam wife
ஓபிஎஸ் மனைவி மறைவு- முதலமைச்சர் இரங்கல்
author img

By

Published : Sep 1, 2021, 11:15 AM IST

Updated : Sep 1, 2021, 11:33 AM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. உடல்நலக் குறைவு காரணமாக விஜயலட்சுமி சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவம் பலனின்றி இன்று (செப்டம்பர் 1) காலமானார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,"அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இல்லத்துணையைப் பிரிந்து வாடும் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி

Last Updated : Sep 1, 2021, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.