முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்து வருகிறார். அந்த வகையில் இன்று காலையில் நடைப்பயிற்சி செய்தபோது தன்னுடன் இருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'கலகத் தலைவன்' திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப்பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "படம் ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு, பொதுவா சில படங்களில் பாட்டு வரும் போது பலர் எழுந்து போவாங்க. ஆனால் அப்படி இல்லாமல் அனைவரும் படத்தைப் பார்த்து ரசித்தனர்'' என்று கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கிங் சென்ற போது கையில் லத்தி போன்ற ஒரு குச்சியினை வைத்திருந்தார். இதனால், திமுகவினர் பலரும் 'வாத்தி ரெய்டு' என விஜயின் டெம்பிளேட்டை போட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உதயநிதியை வரவேற்க வந்த தொண்டர்கள் இடையே வாக்குவாதம்