ETV Bharat / state

’’ பணம்கைப்பற்றப்பட்ட தொகுதியில் தேர்தல்: ஆணையம்தான் முடிவெடுக்குக்கும்”

சென்னை : பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு
தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு
author img

By

Published : Apr 4, 2021, 3:48 PM IST

இதுகுறித்து அவ்ர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,’’தமிழநாட்டில் ஏப்ரல் இரண்டாம் தேதிவரை 412 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ராணிப்பேட்டை தொகுதியில் ஒரே வீட்டில் இன்று அதிகாலை 4 மணிக்கு 91.56 லட்சம் ரூபாயும், சிவகாசி தொகுதியில் 45 லட்சம் ரூபாயும், பாளையங்கோட்டையில் 12.17 லட்சம் ரூபாயும், விருதுநகர் தொகுதியில் 65 லட்சம் ரூபாயும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 96 லட்சம் ரூபாயும், சைதாப்பேட்டை தொகுதியில் 1.3 கோடி பணமும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 11.38 லட்சம் பணமும், வேலூர் மாவட்டத்தில் 1.06 கோடி பணமும், ஆயிரம் விளக்கு தொகுதியில் 1.23 கோடி ரூபாயும் கைபற்றப்பட்டுள்ளன.

இவை தவிர கள்ளக்குறிச்சியில் 7600 லிட்டர் அளவுக்கு சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படை தன்மையோடும் நடத்த ஆணையம் விரும்புகிறது. பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்த தகவல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவது அல்லது நிறுத்தி வைப்பது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். மேலும், பணம் கையப்பற்றப்பட்டது குறித்து தேர்தல் மேற்பார்வையாளர்கள், தேர்தல் செலவின கண்காணிப்பாளர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. தேர்தல் ஆணைய அனுமதி பெற்ற தேர்தல் பணியாளர்கள் மட்டுமே மொபைல் ஃபோன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தலைமை செயலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் 18 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணிபுரிந்து வருவதாகவும், வாகன கண்காணிப்பிற்கு தனியாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து வாக்குச்சாவடிக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் நாளை மாலை சென்றடையும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று( ஏப்ரல் 5) மாலை 7 மணிக்கு பிறகு அனைத்து தொகுதியில் உள்ள தங்கும் இடங்களில் வேறு தொகுதியை சார்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளார்களா என ஆய்வு மேற்கொள்ளப்படும்’’ என கூறினார்.

இதையும் படிங்க: நடிப்பதை நிறுத்தி விடுவேன் - கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.