ETV Bharat / state

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை! - Tamil Nadu chief electoral officer

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

Tamil Nadu chief election officer meet with all party members for Integrated draft voter list

author img

By

Published : Nov 3, 2020, 5:55 PM IST

தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

இதில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, இரட்டை பதிவுகளை நீக்குவது, வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 9 கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாளிலிருந்து டிசம்பர் 15ஆம் தேதிக்குள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை (6, 7, 8, 8ஏ) அளிக்க வேண்டும். இது தொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதையும் படிங்க: 'எழுவர் விடுதலை முடிவை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.