ETV Bharat / state

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை ஒத்திவைப்பு.. தமிழக பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - அண்ணாமலை

K annamalai: அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 6-ஆம் தேதி கோவையில் தொடங்கவிருந்த இருந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை அக்.16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைமை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 8:14 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்குப் பின்னர் கே.அண்ணாமலை கடந்த 1-ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்று நேற்று(அக்.03) இரவு சென்னை திரும்பினார்.

அண்ணாமலை டெல்லி சென்றதால் ஏற்கனவே அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருந்த பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டம் அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் என்றும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் மீண்டும் கோவையில் என் மண், என் மக்கள் யாத்திரையை அண்ணாமலை தொடங்குவார் என்றும் பாஜக தரப்பு தெரிவித்தது.

இந்தச்சூழலில் அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டதால் யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்களின் #EnMannEnMakkal நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

    நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை… pic.twitter.com/3irj0T65Zq

    — BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அண்ணாமலையின் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக, "மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயணம் அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைப்பயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? - அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.