இந்தியாவின் 51ஆவது, தமிழ்நாட்டின் 5ஆவது புலிகள் சரணாலயமாக ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயத்தை அறிவித்து ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஆணையில், "புலிகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கவும் புலிகளின் பாதுகாப்பிற்காக 1972இல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில்...
- களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்,
- ஆனைமலை புலிகள் காப்பகம்,
- முதுமலை புலிகள் காப்பகம்,
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
ஆகிய நான்கு புலிகள் காப்பகங்கள் இருக்கின்றன. தற்போது ஐந்தாவதாக ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
![Tiger Sanctuary](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-tnorder-7209106_08022021224026_0802f_1612804226_136.jpg)
![தமிழ்நாடு அரசாணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-tnorder-7209106_08022021224026_0802f_1612804226_634.jpg)
இதன்மூலம் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு, 63 வகையான பாலூட்டிகள், 323 பறவையினங்கள் பாதுகாக்கப்படும்" எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.