ETV Bharat / state

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3ஆவது வாரத்தில் நடத்த முடிவு!

author img

By

Published : May 4, 2020, 6:00 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 3ஆவது வாரத்தில் நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுஜுன் 3ஆவது வாரத்தில் நடத்த முடிவு!

கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மார்ச் 27ஆம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும், தற்போது வரை கரோனாவின் தாக்கம் குறையவில்லை. கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை அளிக்கும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ஆம் தேதி நடைபெறவேண்டிய தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 24ஆம் தேதி நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாத பல ஆயிரம் மாணவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வு நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்பது தெரியாத நிலை இருக்கிறது.

இந்த சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்பொழுது நடைபெறும் என பெற்றோர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கரோனா வைரஸ் பரவுதல் தற்போதுவரை கட்டுக்குள் வரவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியில் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்கல்வியில் செல்வதற்காகவும், வேலைக்குச் செல்வதற்காகவும் தேர்வினை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் கால அட்டவணை மே மாதம் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வினை 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.