ETV Bharat / state

டப்பிங் யூனியன் சங்க கட்டடத்துக்கு சீல் - சின்மயி ட்விட்டரில் பதில் - Tamil Cinema

விதிகளை மீறி கட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழ் திரைப்பட டப்பிங் யூனியன் சங்க கட்டடத்துக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

டப்பிங் யூனியன் சங்க கட்டடத்துக்கு சீல் - சின்மயி ட்விட்டரில் பதில்!

author img

By

Published : Mar 11, 2023, 3:12 PM IST

சென்னை: தமிழ் திரைப்படத்துறையைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், சினிமா தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 24 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. இதில் டப்பிங் யூனியன் எனப்படும் திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்கமும் ஒன்றாக அங்கம் வகிக்கிறது.‌ இந்த பழமை வாய்ந்த டப்பிங் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த டப்பிங் சங்கத்தின் தேர்தலில், ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் இந்த தேர்தலில் ராதாரவியை எதிர்த்து பின்னணி பாடகி சின்மயி போட்டியிட்டார். ஆனால், அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக ராதாரவி போட்டியின்றி தலைவராக தேர்வானார்.

அதுமட்டுமல்லாமல் ராதாரவி தலைமையில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர். இதன் அடிப்படையில் தற்போது டப்பிங் சங்கத்தின் செயலாளராக கதிரவன், பொருளாளராக சீனிவாசமூர்த்தி மற்றும் துணைத் தலைவர்களாக நாராயண பாபு, செல்வராஜ், வீரமணி ஆகியோர் உள்ளனர். இந்த சங்கத்தின் கட்டட அலுவலகம், சென்னை சாலிகிராமம் 80அடி சாலையில் இயங்கி வந்தது.

இந்த கட்டடமானது கடந்த 2011ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, அங்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. சுமார் 75 கோடி ரூபாய் செலவில் இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த புகார் குறித்து மாநகராட்சி சார்பில் டப்பிங் யூனியன் சங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கட்டடத்தை சீல் வைக்கப் போவதாகவும் மாநகராட்சி தரப்பில் டப்பிங் யூனியன் சங்கத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இதனிடையே ராதாரவி தலைமையிலான சங்க நிர்வாகிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ராதாரவியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 11) டப்பிங் யூனியன் சங்கத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், டப்பிங் யூனியன் சங்கம் செயல்படும் கட்டடத்துக்கு சீல் வைத்து பூட்டு போட்டனர். அதேநேரம் இதைத் தடுக்க ராதாரவி எடுத்த இறுதி கட்ட முயற்சிகள் எதுவும் பயன் தராமல் போனதால், நேற்று (மார்ச் 10) இரவோடு இரவாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • The Dubbing Union premises that’s functioning under Radha Ravi has been locked and sealed by the Chennai Corp as of today.
    Blatant irregularities and flouting the law had to catch up someday even if the members support their thalaivar. pic.twitter.com/UKnecuZ3De

    — Chinmayi Sripaada (@Chinmayi) March 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இது தொடர்பாக பிண்ணனி பாடகி சின்மயி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ராதாரவியின் தலைமையின் கீழ் இயங்கி வரும் டப்பிங் யூனியன் அலுவலக கட்டடம் இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் ஆதரவு தலைவருக்கு (ராதாரவி) இருந்தபோதிலும், சட்டவிரோதமாக செயல்பட்டால் என்றாவது ஒரு நாள் பிடிபட்டே ஆக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் கட்சிகளை நேரடியாக சாடி சர்ச்சையில் சிக்கிய "உருட்டு உருட்டு" பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.