நடிகர் சிவக்குமார் சமீபத்தில் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், திருப்பதி கோயிலில் சமூகவிரோத செயல்கள் நடப்பதால் அங்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டும் எனப் பேசியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு அடங்கிய காணொலியை தமிழ் மாயன் என்பவர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிவைத்தார். இதனை உறுதி செய்துகொண்ட தேவஸ்தானம் திருமலை காவல் நிலையத்தில் சிவக்குமார் மீது அவதூறு வழக்குத் தொடுத்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வாரிய உறுப்பினர் சுதா நாராயண மூர்த்தி தனது பதவியை ராஜிநாமா செய்ததாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பியவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவக்குமார் ஏற்கனவே, தஞ்சை பெரியகோயிலின் சிவலிங்கம் சிலையை செதுக்கியவர் கோயிலுக்குள் போக முடியாத நிலை உள்ளது எனப் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: நானும் முருக பக்தன்தான் - இந்து அமைப்புகளுக்கு சிவக்குமார் விளக்கம்!