ETV Bharat / state

சென்னையை முடக்கிய கனமழை..! மழைநீரால் தத்தளிக்கும் தாம்பரம் - வேளச்சேரி சாலை! - சென்னை மாநகராட்சி

Chennai rains: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாம்பரம்-வேளச்சேரி சாலை மழை நீரில் மூழ்கியது.

Tambaram to Velachery road drowned in flood due to heavy rain in Chennai
சென்னையில் பெய்த கனமழையால் சாலைகள் மழை நீரில் மூழ்கியது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 1:22 PM IST

சென்னையில் பெய்த கனமழையால் சாலைகள் மழை நீரில் மூழ்கியது

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், சேலையூர், சிட்லபாக்கம், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை முழுவதும் இரண்டு அடிக்கு மேல் மழை நீர் தேங்கியதால் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தள்ளி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை மழை நீரால் மூடிய நிலையில் குளம்போல் காட்சியளிக்கிறது. உடனடியாக முக்கிய சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு.. பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.