ETV Bharat / state

தாம்பரம் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல்.. லோகோ வெளியீடு.. - tambaram budget highlights

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன் மாநகராட்சிக்கான லோகோ வெளியிடப்பட்டது.

Tambaram Corporation  budget session
Tambaram Corporation budget session
author img

By

Published : Mar 27, 2023, 6:46 PM IST

சென்னை: தாம்பரம் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் இன்று (மார்ச் 27) மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, மேயர் வசந்தகுமாரியிடம் நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் பட்ஜெட்டுக்கான ஆவணங்களை வழங்கினர். அப்போது துணை மேயர் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா உடன் இருந்தனர்.

தாம்பரம் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல்

அந்த வகையில், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் வாசித்த நிதிநிலை அறிக்கையில், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர், தெரு விளக்கு, மழை நீர் வடிகால், குடிசைப் பகுதிகள் மேம்பாடு ஆகியவற்றிக்காக 2023-24 வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வரவு ரூ. 702.23 கோடி, அதில் செலவு ரூ.671.53 கோடி, உபரி ரூ.30.70 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, தாம்பரம் மாநகராட்சி மட்டுமல்லாமல், அதனை சுற்றி உள்ள கிராமங்களையும் சேர்த்து ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம், கழிவு நீர் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என பல்வேறு திட்டங்களை தயாரித்து அதனை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன் மாநகராட்சி கட்டடங்கள், மாநகராட்சி முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் குப்பைகளை தரம் பணிக்கு தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணம் வாங்குதல், புதிதாக இயங்கு ஊர்தி வாகனங்கள் வாங்குதல், தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு புதிய LED விளக்குகள் பொருத்துவதற்கும், பழுதடைந்து உள்ள LED விளக்குகளை மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய குடிநீர் தொட்டிகள், பாதாள சாக்கடை பணிகள், ஆழ்துளை மற்றும் கைப்பம்பு பணிகள், மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள், ஸ்மார்ட் வகுப்புகள், நூலகங்கள், சுகாதாரமான நவீன வசதிகள் உடன் கூடிய கழிப்பறைகள், இதர பராமரிப்பு பணிகளும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் நகர்ப்புற ஏழை, மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, பாதாள சாக்கடை வசதி, திரைக்கழிவு மேலாண்மை வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் மொத்த வருவாயில் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதன் உடன் இணைக்கப்பட்டு உள்ள ஊரக பஞ்சாயத்துகளுக்கும் சேர்த்து குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்களை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தவும் விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு நிதி நிலை அறிக்கையில் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சம அளவில் பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ரூபாய் 5 கோடி என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தாம்பரம் மாநகராட்சிக்கான லோகோவை மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், ஆணையர் அழகுமீனா ஆகியோர் வெளியிட்டனர். இந்த லோகோவில் தாம்பரம் மாநகராட்சியில் அதிக நீர் நிலைகள், மலைகள், எம்.ஐ.டி, எம்.சி.சி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், விமானப்படை ஆகியவற்றை குறிக்கும் விதமான படங்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு தாம்பரம் மாநகராட்சி என்றும் மக்கள் பணியில் எனும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியின் லோகோ குறித்து அனைவரிடமும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக உருவாக்கப்பட்டதாக 4ஆவது மண்டல குழு தலைவர் காமராஜ் வாதம் செய்தார். இவரைத் தொடர்ந்து சில உறுப்பினர்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரம்பரியத்தை கருத்தில் கொள்ளாமல் லோகோ உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதன் பின் தாம்பரம் மாநகராட்சியின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் அடுத்த கூட்டத்தில் நடைபெறும் என்று மேயர் வசந்தகுமாரி அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தை முடித்து வெளியே வந்த தாம்பரம் மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் ஒரு வருட காலமாக எந்த ஒரு அடிப்படை வசதிகளுக்கான பணிகளும் நடைபெறவில்லை. ஆனால், நிதி நிலை அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உட்கட்சி பூசல் காரணமாகவே எந்த பணியும் தாம்பரம் மாநகராட்சியில் நடைபெறாமல் உள்ளது.

இதனால் பொதுமக்கள் பாதிக்கபடுகின்றனர். இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் எதுவும் இல்லை. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் பட்ஜெட் மீதான விவாதம் அடுத்த கூட்டத்தில் நடத்தப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் நடத்த மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் வழங்கப்படும் - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.