தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க இருப்பதால், பள்ளி வளாகத்தில் உள்ள மண் புதர்கள், முட்செடிகள் ஆகியவற்றினால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் பரவும் தொற்று நோயான, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை வர வாய்ப்புள்ளது.
இதனை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் பேசி 100 நாள் வேலை பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களை தூய்மை செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வழங்க வேண்டும்.