Tahil ramani resignation news update: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, தஹில் ரமாணி மேகாலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டார். இந்த பணியிடமாறுதல் முடிவை மறுபரிசீலனை செய்ய தஹில் ரமாணி விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது.
இதனால், அதிருப்தியடைந்த தஹில் ரமாணி, தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார்.
அதனால் அவரின் அமர்விற்கு ஒதுக்கப்பட்டிருந்த முக்கிய வழக்குகளை இரண்டாம், மூன்றாம் அமர்வின் மூத்த நீதிபதிகள் முன் பட்டியலிடப்படுவதாக பதிவுத் துறை தெரிவித்தது.
கொலிஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும்வரை வழக்குகளை விசாரிப்பதிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளிலிருந்தும் தஹில் ரமாணி விலகியிருந்தார்.
இந்நிலையில், தஹில் ரமாணியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: தேவைப்பட்டால் தஹில் ரமாணி பணியிட மாறுதலுக்கான காரணம் கூறப்படும் - கொலிஜியம்