அண்ணா பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணை வேந்தராக வேல்ராஜ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும்.
மிக நன்றாக புரிய கூடிய 20 விழுக்காடு மாணவர்களுக்கு ஒருவகையான பாடத்திட்டம், தொழில்துறையை எதிர்பார்க்கக்கூடிய 80 விழுக்காடு மாணவர்களுக்கு ஒரு வகையான பாடத்திட்டம் என இரண்டு வகையான பாடத்திட்டங்களை மாற்றி உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஆராய்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவது மற்றும் நோபல் பரிசு பெற கூடிய அளவிற்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சொல்கிறபடி இனி வரும் நாள்களில் அரசின் கருத்துக்களை கேட்டு அரசு சொல்கிறபடி பல்கலைக்கழகம் செயல்படும் .
அண்ணா பல்கலை கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் சூரிய சக்திகளை பயன்படுத்தி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.