ETV Bharat / state

நீடித்த வளர்ச்சி இலக்குகள் கருத்தரங்கு: நிதி ஆயோக் அமைப்பினர் பங்கேற்பு - Sustainable Development Goals Seminar

சமூக நீதி உள்ளிட்ட ஏழு முக்கிய துறைகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அடைய வேண்டிய இலக்குகள், நீடித்த வளர்ச்சி இலக்குகளோடு ஒத்திசைவதாக உள்ளது என தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Niti Aayog
நிதி ஆயோக்
author img

By

Published : Jul 15, 2021, 8:14 AM IST

சென்னை: நீடித்த வளர்ச்சி இலக்குகள் இந்திய தரவரிசை குறியீடு, 2020-21 மற்றும் பல்பரிமாண வறுமை குறியீடு ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூலை 12, 13 தேதிகளில் நடந்தது.

தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையும், நிதி ஆயோக் அமைப்பும் இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில், நிதி ஆயோக் அமைப்பின் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான ஆலோசகர் சன்யுக்தா சமத்தார் தலைமையிலான அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதே போல, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அரசு முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சமீபத்தில் வெளியிடப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்கு இந்திய தரவரிசை குறியீடு 2020-21 ஆவணத்தை நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசகர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரிடம் வழங்கினார்.

மேலும், பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையால் வடிவமைக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் தமிழ்நாடு புள்ளி விவரங்கள் அடங்கிய தொகுப்போடு 2020, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட, நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசகர் பெற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், "தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையில் அடையாளம் காணப்பட்ட, பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர் வசதி, கல்வி, நகர் பகுதிகள் மேம்பாடு, ஊரகப் பகுதிகளின் கட்டமைப்பினை மேம்படுத்துவது, சமூக நீதி ஆகிய ஏழு முக்கிய துறைகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அடைய வேண்டிய இலக்குகள், நீடித்த வளர்ச்சி இலக்குகளோடு ஒத்திசைவதாக உள்ளது" என்றார்.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாநில துறைகளின் செயலாளர்கள் மற்றும் துறைகளின் சார்பாகப் பங்கேற்ற அலுவலர்கள், நீடித்த வளர்ச்சி இலக்குகளில் உள்ள தங்கள் துறை சார்ந்த குறி காட்டிகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.