ETV Bharat / state

விழுப்புரம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சிறப்பு டிஜிபி மனு - விழுப்புரம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சிறப்பு டிஜிபி மனு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்த விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி - சிறப்பு டிஜிபி மனு

author img

By

Published : Dec 2, 2021, 10:08 PM IST

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்குச் சென்ற பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவர் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா குழு (Vishaka Committee) அமைக்கப்பட்டது. நாமக்கல்லிலிருந்து உளுந்தூர்பேட்டைக்குத் தனது காரில் வந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக சிபிசிஐடி, பிப்ரவரி 27ஆம் தேதி பதிவு செய்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜூலை 29ஆம் தேதி 1300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இந்தக் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்த விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

விசாரணை வரம்பைக் கருத்தில் கொள்ளாமல்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதை மனதைச் செலுத்திப் படித்து முடிவெடுக்காமல், விசாரணை வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கு என்ற அழுத்தத்திலேயே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த டிஜிபி-பதவி உயர்வுக்கான பட்டியலில்

அடுத்த டிஜிபி-யாக பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள தன்னை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன், தனக்கு எதிராகப் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிபி தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி

இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? என்பது குறித்த விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன் நடந்தது. அப்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவை விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.