ETV Bharat / state

சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் தூய்மை பணிகளுக்காக வாகனம் நன்கொடை - cleanliness drives

கானாத்தூரில் தூய்மை பணிகளுக்காக நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharatதூய்மை பணிகளுக்காக வாகனத்தை  நன்கொடை வழங்கிய  சூர்யாவின் 2டி நிறுவனம்

author img

By

Published : Oct 15, 2022, 12:29 PM IST

சென்னை பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் வழங்கினார். சூர்யா 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பல தன்னார்வ செயல்பாடுகளை செய்து வருகிறது. கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தையான நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார்.

தூய்மை பணிகளுக்காக வாகனத்தை  நன்கொடை வழங்கிய  சூர்யாவின் 2டி நிறுவனம்

இந்த நிகழ்வின்போது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் கானாத்தூர் நிர்வாகிகள் உடனிருந்தனர். நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

இதையும் படிங்க:நயன்தாரா மீது காவல் நிலையத்தில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.