1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றிபெற்று 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததைக் கொண்டாடும்விதமாக இந்திய விமான படையின் சூரியகிரண் குழு, இன்று தாம்பரம், சூலூர், புதுச்சேரி, கோவளம், சென்னை மெரினா கடற்கரை, வட சென்னை உள்ளிட்ட பகுதிகள் வழியாக வானில் குழுவாகப் பறந்து சாகசத்தில் ஈடுபட்டது.
இளைஞர்களை ராணுவம், கடற்படை, விமான படையில் சேர ஈர்க்கும்விதமாக சூர்யகிரண் விமான குழு நாடு முழுவதும் பறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு மத்தியில் பொதுமக்களை நேரில் சென்று சந்திக்க இயலாத காலத்தில், சூரியகிரண் வானத்திலிருந்து கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்தக் குழு கன்னியாகுமரி பகுதியில் வானில் 71 வடிவத்தில் பறக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 1971 போரின் 50ஆவது நினைவு தினம்...விமானப் படையின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம்!