ETV Bharat / state

மொத்த திமுகவும் விரைவில் பாஜகவில் இணையும் - திருச்சி சிவா மகன் சூர்யா உறுதி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

திமுக எம்.பி.யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். மொத்த திமுகவும் விரைவில் பாஜகவில் இணையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா மகன் சூர்யா சிவா
திருச்சி சிவா மகன் சூர்யா சிவா
author img

By

Published : May 9, 2022, 6:48 AM IST

Updated : May 9, 2022, 10:03 AM IST

சென்னை: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை பாஜக கைபற்றும். உழைப்பிற்கு அங்கீகாரம் உள்ள இடத்தில் இணைந்துள்ளேன். எனக்கு திமுகவில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். நிர்வாகிகளின் உழைப்பிற்கு மதிப்பு அளிக்கிறார். எனக்கு பதவி எதுவும் வேண்டாம். உழைப்பிற்கும் மட்டும் அங்கீகாரம் வழங்கினால் போதும்.

மொத்த திமுகவும் விரைவில் பாஜகவில் இணையும் - திருச்சி சிவா மகன் சூர்யா உறுதி

திமுகவில் உதயநிதியை விளம்பரபடுத்த ஒரு குழுவே வேலை செய்து வருகிறது. முதலமைச்சரின் மருமகன் ஒருபுறம், உதயநிதி ஒருபுறம், கனிமொழி ஒருபுறம் என உட்கட்சிபூசல் அதிகமாக உள்ளது. நான் பாஜகவில் இணைந்ததை சிவா எதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களது மாநில தலைவர் அண்ணாமலை ஏற்றுக்கொண்டு விட்டார். இனி மொத்த திமுகவும் விரைவில் பாஜகவில் இணையும்" என்று சூர்யா சிவா கூறினார்.

இதையும் படிங்க : அதிமுகவைக் கைப்பற்ற யாகம் செய்தாரா சசிகலா? - நடந்தது என்ன?!

Last Updated : May 9, 2022, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.