ETV Bharat / state

திரையரங்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? ஆய்வு சொல்லும்‌ முடிவு என்ன?

கடந்த இரண்டு ஆண்டுகளில் திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

திரையரங்கு
திரையரங்கு
author img

By

Published : Feb 16, 2023, 6:20 PM IST

சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் முடங்கிவிட்டன. இந்தியாவில் குறிப்பாக, சினிமா தொழில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் படப்பிடிப்பு நடைபெறவில்லை. திரையரங்குகளும் மூடப்பட்டு இருந்தன.

இதனால், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த மக்களுக்கு ஓடிடி என்னும் அருமருந்து பயனுள்ளதாக இருந்தது. தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி, பிற மொழிப் படங்களையும் பார்த்து ரசித்து வந்தனர். அதன்பிறகு கரோனா தொற்று குறைந்தபோதும் பொதுமக்கள் ஓடிடியில் இருந்து மீளவில்லை. இதனால் திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

எல்லா படங்களையும் பார்க்க வேண்டாம்; பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் பார்த்தால் போதும் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். இதனால் ஒரு சில உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு தான் திரைப்படங்களில் கூட்டம் கூடுகிறது. மற்ற படங்களின் நிலை படுமோசமாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

இப்படி ரசிகர்களின் ஓடிடி மனப்பான்மையால் திரையுலகம் மிகப் பெரிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம்‌ வந்தது. அதன்பிறகு வந்த எந்த படத்திற்கும் ரசிகர்கள் கூட்டம் வரவேயில்லை. படம் நன்றாக இருந்தாலும் எப்படியும் அடுத்த மாதம் ஓடிடியில் வந்து விடும் என்ற நிலைக்கு பொதுமக்கள் சென்று விட்டனர்.

இந்நிலையில் Ormax Media என்ற நிறுவனம் sizing the cinema என்ற தலைப்பில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 ஆயிரம் சினிமா பார்வையாளர்களிடம் பாலினம், வயது, இடம் மற்றும் மொழி அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு முடிவின்படி கடந்த கரோனா தொற்று ஏற்பட்ட 2020க்கு முன், 14.6 கோடியாக இருந்த திரையரங்கு சென்று படம் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 12.2 கோடியாக குறைந்துள்ளது. அதாவது சுமார் 2.4 கோடி என திரையரங்கு செல்லும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2020 சமயத்தில் இந்தி படங்களைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 7.4 கோடியாக இருந்தது. தற்போது 5.8 கோடியாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் பாய்காட் பிடியில், சிக்கி தொடர்ந்து இந்திப் படங்கள் மண்ணைக் கவ்வியது தான் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த எந்த ஒரு இந்திப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ஷாருக்கான் நடித்த ’பதான்’ திரைப்படம் மட்டுமே வெற்றி பெற்றது.

தியேட்டர்
திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவு

ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைப் பொறுத்தவரையில் எந்தவொரு சரிவும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய சினிமா மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளதால் எந்தவித குறைவும் இல்லாமல் சுமார் 2.8 கோடி பார்வையாளர்கள் எண்ணிக்கையைத் தொட்டு சமமாக உள்ளன.

மேலும் கடந்த இரு ஆண்டுகளில் கன்னட சினிமா அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கேஜிஎப், காந்தாரா, சார்லி 777 ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றியால் கடந்த இரு ஆண்டைவிட தற்போது 25 சதவீதம் திரையரங்குகளில் சென்று படம் பார்த்த பார்வையாளர்களின் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாலா, புகழால் சிக்கிய ரோபோ சங்கர்.. பிகில் - ஏஞ்சலை தூக்கிய வனத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.