சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இருந்தபோது அவர் மீது முறைகேடு புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்ய, அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நவம்பர் 11ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து துணைவேந்தராக இருந்த சூரப்பா மீது கூறப்பட்ட ஊழல் குற்றாச்சாட்டுகள் குறித்து விசாரணை அலுவலர் கலையரசன் தலைமையிலான குழுவினர் விசாரணையை நடத்தினர். புகார் அளித்தவர்கள், பல்கலைக்கழக அலுவலர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதரங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக, மே மாதம் 3 ஆம் தேதி விசாரணை அலுவலர்கள் சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கத்தை விசாரணை ஆணையத்துக்கு 7 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
சூரப்பா 7 நாட்களில் விளக்கம் தராவிட்டால், குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கருதப்படும் என விசாரணை அலுவலரும், ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கலையரசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 பேராசிரியர் பணியிடங்கள் காலி!