ETV Bharat / state

காலநிலை மாற்றத்தை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் தனிக்குழுக்கள்!

மாவட்ட அளவில் காலநிலை மாற்றம் தொடர்பாக கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கு மாவட்ட ஆட்சியர்களே தலைவர்களாக செயல்படுவர் எனவும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் தனிக்குழுக்கள்!
காலநிலை மாற்றத்தை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் தனிக்குழுக்கள்!
author img

By

Published : Mar 3, 2023, 6:12 PM IST

சென்னை: தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம், அதன் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 3) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பிறகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், “இந்தியாவில் 2070ஆம் ஆண்டில்தான் ‘கார்பன் சமநிலை நாடு’ என்ற பெயரை எட்டும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதல் கார்பன் சமநிலை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையைக் கருத்தில் கொண்டு மூன்று திட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்துள்ளோம். தமிழ்நாட்டின் வனப்பரப்பை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, 2 கோடியே 50 லட்சம் மரக்கன்று பதியம் போடப்பட்டு, நடவு செய்கின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பசுமை தமிழகமாக மாற்றுவதே முதல் இலக்கு.

கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே, கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க ஆய்வு மேற்கொள்வதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இதனையடுத்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன், ''வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த துணைக் குழுக்கள் அமைக்கப்படும். இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்.

காலநிலை மாற்றத்தால் வெப்ப அலை எந்த அளவுக்கு மக்களைப் பாதிக்கிறது என்பது குறித்து எடுத்துரைத்தோம். வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பாக கட்டட தொழிலாளர்கள், மீனவர்கள் போன்றோர் வெப்ப அலைகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அதைத் தடுப்பது மற்றும் வெப்ப அலைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

வெப்ப அலைகளில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். வெப்ப அலையைத் தொடர்ந்து பெரும் சவாலாக இருப்பது, காற்று மாசுபாடுதான். இதை மக்களுடன் இணைந்து தடுப்பது குறித்து விவாதித்தோம். இது போன்ற விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், பாதிப்பைத் தடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, “மாவட்ட அளவில் காலநிலை மாற்றம் தொடர்பாக கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தலைவர்களாக செயல்படுவர். ஒவ்வொரு குழுவுக்கும் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

இந்தக் குழுக்கள் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பது தொடர்பாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சதுப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றிலிருந்து குறுங்காடுகள் வளர்க்கப்படும். இந்தப் பணிகள் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும்'' என்றார்.

மேலும், ''இதுவரை தமிழ்நாட்டில் 13 ராம்சர் தளங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் மீட்கப்படும். காலநிலை மாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 25 பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அவைகள் பசுமைப் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பை பொறுத்தவரையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக பிளாஸ்டிக் குழப்பம் அதிகமாக இருந்து வந்த நிலையில், அதை ஒழிப்பது ஓர் இரவில் செய்து முடிக்கும் காரியம் அல்ல. அதற்கான பணிகள் மெல்ல தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்ற திட்டம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.