ETV Bharat / state

புதிய தேர்வு விதிமுறை: அண்ணா பல்கலை. பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதி மன்ற செய்திகள்

சென்னை: தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ள புதிய தேர்வு விதிமுறைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உயர் கல்வித் துறைக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme Court directs Anna University for semester exam rules
author img

By

Published : Sep 20, 2019, 3:05 PM IST

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வில் கொண்டுவந்த புதிய திருத்தத்தின்படி, மாணவர் ஒருவர் ஒரு பருவத் தேர்வில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடத்தில் தேர்ச்சிபெற மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் தோல்வியடைந்தால், மேற்கொண்டு தேர்ச்சியடையும்வரை அடுத்த பருவத்திற்குச் செல்ல முடியாது.

இந்த புதிய விதிமுறையால் தங்களின் தேர்ச்சி விழுக்காடு பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்து உடனடியாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, புதிய நடைமுறையை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த தடை விதிக்கவேண்டும் என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜே.கே.கே. நடராஜா பொறியல் கல்லூரியைச் சேர்ந்த மெளலி, பிரியதர்ஷினி உள்ளிட்ட 10 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக உயர் கல்வித் துறை செயலரும் அண்ணா பல்கலை கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:'அண்ணா பல்கலை செயல்பாடுகளில் அரசு தலையீடு இல்லை..!' - சூரப்பா விளக்கம்

Intro:Body:தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வி துறை மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைகழகம் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் புதிய திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி மாணவர் ஒருவர் ஒரு செமஸ்டரில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடத்தில் தேர்ச்சி பெற மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.

கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் தோல்வியடைந்தால், மேற்கொண்டு தேர்ச்சியடையும் வரை அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என விதிமுறையை கொண்டு வந்தது.

புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜே.கே.கே நடராஜா பொறியல் கல்லூரியை சேர்ந்த மெளலி, பிரியதர்சினி உள்ளிட்ட 10 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், இந்த புதிய விதிமுறையால் தங்களின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்து உடனடியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அதனால் புதிய நடைமுறையை 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறை படுத்த தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தவடிவேல், இந்த புதிய தேர்வு நடைமுறையால் 2 மற்றும் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும் என வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைகழகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.