ETV Bharat / state

ஆளுநர் உரைக்கு ஆதரவும் எதிர்ப்பும்! - ஆளுநர் உரை

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (ஜுன்.21) நடைபெற்று முடிந்தது. இதனிடையே ஆளுநர் உரைக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும் குறித்து பார்க்கலாம்.

ஆளுநர் உரைக்கு ஆதரவும் எதிர்ப்பும்
ஆளுநர் உரைக்கு ஆதரவும் எதிர்ப்பும்
author img

By

Published : Jun 21, 2021, 8:40 PM IST

பாமக தலைவர் ஜி.கே. மணி:

பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் துறைக்காக தனி நிதிநிலை, அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, லோக் ஆயுக்தா, தமிழ் இந்திய அலுவல் மொழியாக்க நடவடிக்கை போன்றவற்றை ஆளுநர் உரையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கதக்கது.

ஆளுநர் உரையில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்தும், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் பேசப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆளுநர் உரைக்கு பின் பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதலமைச்சரை அவரது அறையில் சந்தித்து 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரிக்கை வைத்தோம். இது குறித்து ஆராய்வதாக முதலமைச்சர் கூறியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன்:

ஆளுநர் உரை அனைத்து கட்சிகளும் விரும்பும் வகையில் சிறப்பாக உள்ளது. ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம் என சுருக்கமாக கூறியிருக்கிறார்கள். சென்ற அரசாங்கத்தில் மேற்கொண்ட திட்டத்தை மாற்றுவோம் என்ற கருத்து உரையில் இல்லை.

நல்ல திட்டங்களை செயல்படுத்துவது தான் நோக்கம் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது. அத்திக்கடவு அவினாசி திட்டம் அதற்கு உதாரணம்.

மதுரவாயல் துறைமுகம் திட்டம் கிடப்பில் போட்டதால் வருவாய் இழப்பு. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை பொருளாதார வளர்ச்சியாக பார்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்:

தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஆளுநர் உரை உள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூக நீதி தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக திமுக செயல்பட்டு வருகிறது.

தமிழ் சமூகத்தில் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் உரை அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவர் செல்வபெருந்தகை:

ஆளுனர் உரை வரலாற்று சிறப்பு மிக்கது. முதலமைச்சர் பதவி ஏற்று இரண்டு மாதங்கள் முடிவடைவதற்குள் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.

குறிப்பாக வேளாண்மை திட்டங்களுக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே போன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் அவர் பதவியேற்று ஒரு மாதத்திற்குள்ளாக 68 மனுக்களை பெற்று அதற்கு தீர்வு செய்துள்ளார்கள்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மாதம் இரண்டாயிரம் ரூபாய், இந்த மாதம் இரண்டாயிரம் ரூபாய், 14 வகையான மளிகை பொருட்கள் 5 கிலோ அரிசி கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஏறக்குறைய ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு அம்சங்களும் பாராட்டுக்குரியது.

விடுதலைச் சிறுத்தைகள் சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச்செல்வன்:

ஆளுநர் உரை புதிய நம்பிக்கையை தருகிறது. வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரவேற்கக்கூடிய அறிவிப்பு.

அதேபோல மீனவர்களுக்கான தேசிய அளவில் ஆணையம், பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச நிபுணர்கள் கொண்ட குழு அமைப்பு ஆகியவை அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் உள்ளது.

அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டம், மாநில கல்வி கொள்கையில் மத்திய அரசின் குறுக்கீடு உள்ளிட்ட விவகாரத்தில் அரசின் முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருக்கும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா:

தந்தை பெரியார் கனவு கண்ட சமூக நீதி, சமத்துவம் அடிப்படையிலான ஆட்சியை அரசு தரும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.

சச்சார் குழு அடிப்படையில் சிறுபான்மை மக்களின் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான வழிமுறைகள் காணப்படும்,
வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போன்றவை வரவேற்கதக்கது.

அதேபோன்று நிதிநிலை அறிக்கை குறித்த அறிவிப்பு, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவையும் வரவேற்கதக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கான சிறப்பு பொருளாதார கலந்தாய்வு குழு: அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.