ETV Bharat / state

நகராட்சி அலுவல் பணிகளுக்காக 187 புதிய வாகனங்கள் வழங்கல்! - சென்னை

நகராட்சித்தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.23.66 கோடி மதிப்பில் 187 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

Supply of new vehicles to municipal officials

author img

By

Published : Aug 1, 2022, 6:55 PM IST

சென்னை: தலைமைச்செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சித்தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் தற்போது முதற்கட்டமாக 100 நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 91 ஸ்கார்பியோ வாகனங்களும், ஆணையர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் ஆகியோரின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 96 பொலிரோ வாகனங்களும், என மொத்தம் 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 187 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலினால் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் புதிய வாகனங்களுக்கான சாவிகளை நகர்மன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சர்வதேச செஸ் வீரர்களை ஈர்க்கும் செல்ஃபி ஸ்பாட் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.