சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு உருவான கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் முக்கியமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த் தொற்று பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக ரூ. 10 லட்சம் மதிப்பிலான மருத்துவம், தடுப்பு மருத்துவ உபகரணங்களை வழங்க "லயன்ஸ் கிளப் 324/A6 மாவட்ட அரிமா சங்க” நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ தடுப்பு உபகரணங்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பழனிவேலிடம் வழங்கப்பட்டது. அதுபோல செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் 5 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதை பெற்றுக் கொண்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல், அரிமா சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசின் அறிவிப்புகளால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்- அனுராக் தாக்கூர் நேர்காணல்