சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பழக்கத்தால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் சுலபமாக கிடைக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அதனைத் தடுக்கவும், மது உள்ளிட்ட போதைப்பொருள்களை தடை செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் கையெழுத்து இட்டு வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரும் இதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். இந்நிலையில் இன்று (பிப்.25) நடிகர் ரஜினிகாந்த் போதையற்ற தமிழ்நாடு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார்.

இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், “போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து #DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையெழுத்திட்டு வாழ்த்தினார்” என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் திருமணமா? - உண்மை நிலவரம் என்ன?