ETV Bharat / state

"கேப்டன் செய்த புண்ணியம் ஆயிரம் தலைமுறைக்கு நிலைத்து நிற்கும்" - நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி - vijayakanth rip

Supergood subramani about Vijayakanth: கேப்டன் என்கிற மாபெரும் சக்தி நம்மைவிட்டு மறைந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என்று நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி விஜயகாந்த்தின் மறைவு குறித்து ஈடிவி பாரத்-திற்கு பேட்டியளித்தார்.

Supergood subramani about Vijayakanth
சூப்பர்குட் சுப்பிரமணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 10:25 PM IST

"கேப்டன் செய்த புண்ணியம் ஆயிரம் தலைமுறைக்கு நிலைத்து நிற்கும்" - நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்து மீண்ட அவர், டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.

அந்த பொதுக்குழுவில் தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவால் செவ்வாய்கிழமை (டிச.26) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (டிச.28) காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். அதன் தொடர்ச்சியாக, சென்னை தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில், இன்று (டிச.29) காலை முதல் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்டது.

மேலும், அவரது இறுதி ஊர்வலம், தீவுத்திடலில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் அடைந்து, இறுதிச் சடங்கானது நடைபெற்று, தேமுதிக தலைமை கழக வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி விஜயகாந்த்தின் மறைவிற்கு இரங்கள் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், "கேப்டன் என்கிற மாபெரும் சக்தி நம்மைவிட்டு மறைந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் அவர் செய்த புண்ணியம் ஆயிரம் தலைமுறைக்கு நிலைத்து நிற்கும். கேப்டன் நமது குடும்பத்தில் ஒருவர்போல்" என்று கூறி விஜயகாந்த்துடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: உணவளித்து ஓய்ந்து போன கைதான் விஜயகாந்த் கை - இயக்குநர் சற்குணம் நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.