ETV Bharat / state

சூடுபிடிக்கும் நீதிபதி கலையரசன் குழு அறிக்கை: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்!

முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை பொதுத்தணிக்கை குழு தகவல் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

author img

By

Published : Aug 8, 2023, 8:00 PM IST

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பதவிக் காலத்தில், பல்வேறு வகையான முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. அதன் மீது அரசின் சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பதவிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சட்டப்பேரவை பொதுத் தணிக்கைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா 2018ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து பெறுவதில் அதிமுக ஆட்சிக்கும், துணைவேந்தருக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றது. துணைவேந்தராக சூரப்பா இருந்தபோது ஏற்பட்ட மோதல் காரணமாக, பொறியியல் மாணவர்கள் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து தொழில்நுட்பக் கல்வி இயக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அரசின் அனுமதியைப் பெறமால் சிலத் திட்டங்களை செயல்படுத்தியதால் விதிமீறல்கள் நடைபெற்றதாகவும், அதனால் அரசிற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், முறைகேடுகளும் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் சூரப்பா துணைவேந்தராக இருந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதா? என்பதை விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், பணி நியமனங்களில் பணம் பெற்றதாகவும், கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது உள்ளிட்டப் பல புகார்கள் குறித்து விசாரித்து, விசாரணைக் குழு ஆய்வு செய்து அறிக்கையை அளித்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் தமிழக அரசிடம் சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை கலையரசன் சமர்ப்பித்துவிட்ட நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், இது குறித்து சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இந்தியக் கணக்கு தணிக்கைத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு விதிமீறல்கள், புகார்கள், ஊழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பொதுக்கணக்குக்குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்போது, "கடந்த காலங்களில் அண்ணாப் பல்கலைகழகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளோம்.

மூன்று மாதங்களுக்குள் விரிவான விசாரணை நடத்தி, தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட திட்டமிட்டு உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதன்படி முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட பல்வேறு முன்னாள் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழுவின் அறிக்கை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்னாள் அதிகாரிகளுக்கான இந்த சம்மன் அதிகாரிகள் மத்தியில் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது.

இதையும் படிங்க: 2வது நாள்... 100-க்கும் மேற்பட்ட கேள்விகள்... செந்தில் பாலாஜியிடம் ED கிடுக்குப்பிடி விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.