சென்னை: கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஐபிஎஸ், இன்று காலை கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை 6.45 மணியளவில் வழக்கம்போல டிஐஜி விஜயகுமார் நடைபயிற்சி மேற்கொண்டு பின்னர் முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அதன் பிறகு தனது மெய் பாதுகாவலரிடம் துப்பாக்கியை பெற்றுக் கொண்டு அவரது அறைக்குச் சென்ற விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
2009 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி உள்ளார். நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றுள்ள விஜயகுமார், குறிப்பாக சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்தபோது தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற விஜயகுமார், கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டிஐஜி விஜயகுமார் மன உளைச்சலில் இருந்து வந்ததால் உயர் அதிகாரிகள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விஜயகுமாருடன் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மன உளைச்சலில் இருந்த விஜயகுமாருக்கு சில நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இன்று அதிகாலை திடீரென துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்னை காரணமாக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தனது ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வுபெற்ற நீதியரசர் திரு சி.டி செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?. காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?.
-
கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.…
— K.Annamalai (@annamalai_k) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.…
— K.Annamalai (@annamalai_k) July 7, 2023கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.…
— K.Annamalai (@annamalai_k) July 7, 2023
காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்றுக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: DIG Vijayakumar: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை - முதலமைச்சர் இரங்கல்