ETV Bharat / state

பொள்ளாச்சி விவகாரம் குறித்த சர்ச்சை பேச்சு: இயக்குநர் பாக்யராஜ் மீது புகார்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவத்திற்கு பெண்கள் தான் காரணம் என பேசிய இயக்குநர் பாக்யராஜை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

sudesi-womens-activist-complaint-against-director-bhagyaraj
sudesi-womens-activist-complaint-against-director-bhagyaraj
author img

By

Published : Nov 28, 2019, 3:45 PM IST

கருத்துகளை பதிவு செய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 25ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அதில் ஊசி இடம் தராமல் நூல் நுழையாது என்றும், பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு பெண்கள் தான் காரணம் எனவும் அவர் பெண்களைப் பற்றி அவர் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் பாக்யராஜ் மீது தமிழ்நாடு சுதேசி பெண்கள் சங்கம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாக்யராஜ் மீது சுதேசி பெண்கள் சங்கம் புகார்

இதுகுறித்து பேசிய சுதேசி பெண்கள் சங்க நிர்வாகிகள், ஒட்டு மொத்த பெண்களையும் பாக்யராஜ் குறை கூறி இருப்பது வேதனை அளிக்கிறது. ஒட்டு மொத்த பெண்களின் கவுரவத்தை இழிவாக பேசியுள்ள பாக்யராஜை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க...

அகில உலக சூப்பர் ஸ்டாரின் 'சுமோ' - புது அப்டேட்

Intro:Body:பொள்ளாச்சி பாலியல் குற்றசம்பவத்திற்கு பெண்கள் தான் காரணம் என பேசிய இயக்குனர் பாக்யராஜை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..

கடந்த 25 ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் இசை நிகழ்ச்சியில் இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.அதில் ஊசி இடம் தராமல் நூல் நுழையாது என பெண்களை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறினார்.

மேலும் பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு பெண்கள் தான் காரணம் என குற்றம்சாட்டி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என கூறினார்.பின்னர் ஒட்டு மொத்த பெண்ணையும் பாக்யராஜ் குறை கூறி இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் அவரது திரைப்படங்களில் ஆபாசம் போன்ற காட்சிகள் இடம்பெற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.இதனால் சமூகத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் கூறினார்.

எனவே ஒட்டு மொத்த பெண்களின் கவுரவத்தை இழிவாக பேசியுள்ள பாக்யராஜை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.