ETV Bharat / state

சாலையில் 30அடி தூரத்திற்கு திடீர் பள்ளம் - உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

சென்னை: அம்பத்தூர் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில், 30 அடி தூரத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

damage road
damage road
author img

By

Published : Nov 3, 2020, 3:28 PM IST

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகரில் மகாத்மா காந்தி சாலை உள்ளது. இந்த சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இச்சாலையை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (நவ.2) காலை அம்மா உணவகம் அருகில் திடீரென்று 30அடி நீளம், 10ஆடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால், அவ்வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் காவல்துறையினர் திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றி தடுப்புகள் அமைத்தனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர், புதிய சாலை அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்றனர்.

இதையும் படிங்க: உயர்மின் கடத்தி கம்பி பராமரிப்பு: தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.