தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் அடிப்படையில், அக்டோபர் 5-ஆம் தேதி முதல் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி இன்று (அக்.05) காலை முதல் பணியாளர் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன.
அரசு அனுமதித்த பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் புறநகர் ரயில்கள் வழக்கமாக காணப்படும் கூட்டத்தைவிட மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
தமிழ்நாடு அரசின் சிறப்பு அலுவலர் மூலம் அத்தியாவசிய பணியாளர்கள் என சான்று வழங்கப்பட்ட நபர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்றும் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தேவையை கருதி 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை இயக்கப்படுவதாகவும், வழக்கமான வழித்தடங்களிலேயே ரயில்கள் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆறு மாதத்துக்கு பிறகு மதுரை வந்த தேஜஸ் ரயில்!