ETV Bharat / state

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் நிலம் வாங்க விலையில் 50% மானியம் - நிலமற்ற ஆதிதிராவிட மக்கள்

தமிழ்நாட்டில் நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் நிலம் வாங்க விலையில் 50% மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நிலமற்ற ஆதிதிராவிட
நிலமற்ற ஆதிதிராவிட
author img

By

Published : Sep 17, 2022, 9:57 PM IST

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் 2022-2023ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் வழங்க 10 கோடி ரூபாய் மாநில அரசு நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் நிலம் வாங்க விலையில் 50% மானியம்

இதையும் படிங்க: மோடியை பெரியாராக காட்டுவது தமிழகத்தில் நடக்காது - திருமாவளவன் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.